Saturday, February 28, 2009
Sunday, February 22, 2009
Thursday, February 19, 2009
Friday, February 13, 2009
ராம் ஸேனா
வேலன்டைன்ஸ் டே அன்று பீச்சோரமாக கரையொதுங்கும் ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்போவதாக அறிவித்திருந்த "ராம் ஸேனா" இரண்டு வாரங்களில் லோகப்பிரசித்தி அடைந்துவிட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து படித்த அதிமேதாவிக்கும்பல், "பின்க் ஜட்டி" என்ற கேம்பெய்ன் ஆரம்பித்து "ராம் ஸேனா" அங்கத்தினருக்கு பின்க் நிற ஜட்டிகளை அனுப்பியது.
இதை "காந்திகிரி" போராட்டம் என்று அபத்தமாக என்.டி.டி.வி கூறுகிறது. பாகிஸ்தான் இலங்கை பிரச்சனைகளையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு, செய்தி அலைவரிசைகள் அனைத்தும் இதற்கு அதி-முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
கண் கொட்டாமல் இதையெல்லாம் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
கேள்வி : இந்த நால்வரில் அதிகப்படியான முட்டாள்தனம் யாரிடம் இருக்கிறது ?
நிற்க.. ஐந்தாவது முட்டாளாக, பீச்சோரம் கரை ஒதுங்குவோரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------
பிகு - ராம் ஸேனா "on the corollary" இன்னொன்றும் செய்யலாம். சரவணா ஸ்டோர்ஸ் வாசலில் கடுப்பாக உட்கார்ந்திருக்கும் கணவன்மார்களுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுக்கலாம்.

நாளை நான் கடவுள் பார்க்கப்போகிறேன். !

டில்லி-6 பாடல்கள் சூப்பர் !
ரஹ்மான் இனிமேல் தமிழில் அபூர்வமாகிவிடுவாரோ ?

Monday, February 09, 2009
ஜாலியோ ஜிம்கானா !
எடை குறைக்கும் முயற்சியில் ஒரு ஜிம் சென்று சேர்ந்திருக்கிறேன். (ஜிம் சென்று சோர்ந்திருக்கிறேன் என்றும் சொல்லலாம்). ஆபீஸ் கிளம்பும் அலறலான அந்த அரை மணி நேரத்துக்கு முந்தைய ஒரு மணி நேரத்தை இந்த உடற்பயிற்சி கபளீகரம் செய்வதால், ப்ளாக் பக்கம் வர முடிவதில்லை.
ஒரு நல்ல சுபயோக சுபதினத்தில், ஜிம்முக்கு பணத்தைக் கட்டிவிட்டு ஜிம் போவதற்குத் தேவையான உபகரணங்களையெல்லாம் வாங்கிக்கொண்டும், அந்த காமெடியான டிராக் சூட்டையும் ஷூவையும் மாட்டிக்கொண்டும் உள்ளே நுழைந்தேன்.
ரிசெப்ஷன் வரை மட்டும்தான் அன்பான மனிதர்கள் இருப்பார்கள். அதற்கப்புறம் தசையை எலும்பை வதைக்கும் மெஷின்களும் அதைக் கண்காணிக்கும் மனிதர்களும்தான். நல்ல ஜிலுஜிலு ஏ.சி, டி.வி பொருத்தப்பட்டுள்ள டிரெட்மில்கள், அலறும் இசை என சகல வசதிகள் இருந்தாலும் "வொர்க் அவுட்" செய்யும்போது எல்லாமே துச்சம்தான்.
டிரெட்மில் : ஐந்தரை மணிக்கு பத்துப் பதினைந்து பேர் ஒன்றாகக் கிளம்பி ஒரே இடத்திலேயே நடந்துகொண்டிருப்போம். ஒரு சிலர் வேகமாக ஓடுவர்.. அவர்கள் ஓடுவதைப் பார்க்கும்போதே எனக்கு சில கேலொரிக்கள் குறைவதாகத் தோன்றும். ஒரு சிலர் வெகு காஷுவலாக நடப்பர். ஒரு அரை மணி நேரம் நடையாய் நடந்துவிட்டு இறங்கினால், காலுக்கு அடியில் பூமி சுழல்வதை உணரலாம்.
கொஞ்சம் டிரெட்மில்லை விட்டுத் தள்ளி வந்து கண்ணாடி முன் நின்று தொப்பையைத் தடவிப்பார்த்துக்கொள்வேன். "அரச மரத்தைச் சுத்திவந்து அடிவயித்தைத் தொட்டுப்பார்த்தாளாம்" என்கிற கதையாய், அரை மணி நேரத்தில் தொப்பை குறைந்துவிட்டதா என்று ஊர்ஜிதப்படுத்திக்கொள்வேன்.
ஆனால், கால் நூற்றாண்டுகள் வளர்த்த தொப்பை அரை மணி நேரத்தில் கரைகிறதென்றால் அந்த தொப்பைக்கு என்ன மரியாதை என்று சமாதானப்படுத்திக்கொண்டு சைக்கிள் மிதிக்கப் போய்விடுவேன்.
பார்க்கலாம்..
அதிகாலை நாலரை மணிக்கு விழிப்பு...
ஒரு மணி நேரம் கடும் உழைப்பு
கொஞ்சம் கொஞ்சமாய் கரையுது கொழுப்பு

Sunday, February 08, 2009
Saturday, February 07, 2009
மாதங்கி மாயா அருள்பிரகாசம்
Slumdog Millionaireல் வரும் இந்தப்பாடல் ரொம்பவும் பிடித்துப் போயிற்று.
இதைப்பாடியிருப்பவர் - M.I.A என்கிற மாதங்கி அருள்பிரகாசம். :)
Sunday, February 01, 2009
Subscribe to:
Posts (Atom)