இந்த மாதிரி நாமே ஏதாவது படம் போட்டுக்கொண்டால்தான் உண்டு. இது ஒரு அல்பத்தனமான விளையாட்டு... பழைய படங்களை கூகிளில் தேடிப்பிடித்து டைட்டில் போடுவது.. போஸ்டர் டிசைன் செய்வது... எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி நாளைக் கடத்துவது ?... ஹ்ம்ம்... ஏதாச்சும் உத்திரவாதமா சேதி சொல்லுங்கப்பா !
தலைவன் உணர்ந்துகொள்ள வேண்டியது எல்லாம் "ரசிகன் இருக்கின்றான்" என்பதை...
வெகு நாட்கள் கழித்து கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். கம்ப்யூட்டரில் ஒரு பிரச்சனை வந்து இப்பொழுதுதான் சரியாகி இருக்கிறது. நல்ல வேளையாக ஆக்குபைடாக இருந்ததால் ரொம்பவும் மிஸ் செய்யவில்லை. ரொம்ப நாள் கழித்து தமிழில் டைப் செய்வதால், நாக்கு மாதிரி, கைகளும் குழறுகின்றன. கொஞ்சம் எழுத்து பழக வேண்டும்.
--
காலையில் ஸ்ரீகாந்த் அனுப்பிய லின்க். சே ! என்ன ஒரு குரல். என்ன நளினம். என்ன இனிமை. மொக்கையான ஒரு நடுவராக இல்லாமல், மால்குடி சுபா இந்த சூப்பர் சிங்கரை தூக்கி அணைத்து பரவசமாக சுற்றுவது - இதுதான் மார்க்.
பல மெண்டல் ஜட்ஜ்களைப் பற்றி ஒரு பதிவு போட இருந்தேன். (டைட்டில் - ஒரு Judge + ஒரு Mental = ஜட்ஜ்மென்டல்... நாளை போடுகிறேன்). அது பற்றி எழுதிக்கொண்டிருக்கும்போது இது வந்தது ஒரு வெல்கம் சேஞ்ச் !