Friday, July 30, 2010
Wednesday, July 28, 2010
அமுக்குடா ஆக்ஸலேட்டர.. !

படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால்.. மயக்கத்திலிருந்து விடுபட்ட உணர்வு.. அத்தனை நேரம் கிராமத்தில் இருந்துவிட்டு வந்த "கனவு கலைந்த" நிலை. தெரிந்தோ தெரியாமலோ,.. ஒரு அன் - ஆர்தொடாக்ஸ் படம். சூப்பர்.
சினிமாவின் "கிராமப் படம்" ஃபார்முலாவை உடைத்தெரிந்து பல படங்கள் வர ஆரம்பித்துள்ளன.. எல்லாவற்றையும் பார்த்ததில்லை என்பதனால் அவற்றோடு இந்தப்படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் தெளிவு என்னிடத்தில் இல்லை.
இந்தப் படத்தில் பல பேரின் நடிப்பு, அபாரம்.. unfortunately overlook செய்யப்படும். அதிகபட்சம் விகடனில் படத்துடன் பேட்டி வரும். அவ்வளவே..
கதை... தெரிந்தகதை.. சுமாராக ஊகிக்கக்கூடிய கதை.. என்றாலும் ஊகிக்க விடாமல், கதையோடு கவனம் சிதறாமல் கூட்டிச்செல்லும் திரைக்கதை.. க்ளாஸ் ! இன்டர்வெல் இல்லாமல் கூட பார்க்கலாம்.. (பாட்டு மட்டும் கொஞ்சம் கைகொடுத்திருந்தால்)
எனக்கு வியப்பாக இருப்பது.. இந்தப் படத்தில் அனாயாசமாக + அனிச்சையாக இருக்கும் perfections. எல்லா கதாபாத்திரங்களையும் நாமே எடை போடுகிறோம்.. அவர்களோடு பழகி அவர்களைப் பற்றி தெரிந்துகொள்கிறோம்.. The movie is open.. and lets us to be judgemental. யாரையும் "நல்லவன்" "கெட்டவன்" என்று சாயம்போட்டு, BGM கொடுத்து பில்டப் தரவில்லை.. நாமாக தெரிந்துகொள்கிறோம்..மெல்லிதான காமெடி இழையோடியபடியே நகரும் இடத்தில், கஞ்சா கறுப்பு நுழையும் போது இடியுடன் கூடிய மழை.. வெல் தாட் !
A. சற்குணம் - இயக்குனரின் முதல் படம். அவருக்கு ஒரு ஷொட்டு ! ஹீரோ.. ஹீரோயின் தவிர்த்த அத்தனை நடிகர்களும் அபாரம்.. ஒளிப்பதிவு ப்ரமாதம்.. எடிட்டிங் - கச்சிதம்.. இசை - சுமார்.. கதை - சுமார்.. திரைக்கதை - ஓஹோ !
இயக்குனர்.. அடுத்த படத்தை "காதல்" இல்லாமல் எடுத்தால் கண்டிப்பாகப் பார்ப்பேன்.. நம்ம தமிழ் சினிமா உடனடியாக வெளியே வரவேண்டிய விஷயங்கள் - காதல், கிறுக்கு (அ) பொறுக்கி ஹீரோ சப்ஜெக்டுகள்...
நம்ம ஊரில் "களவானி" இன்னும் ஓடுகிறதா ? நன்றாக ?
Monday, July 26, 2010
Tuesday, July 13, 2010
செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தை, தொலைத்து விடுவேன்..
ஒரு மாதம் விடுமுறையில் சென்னைக்கு வருகிறேன்..
ஏரோப்ளேன் டிக்கெட் வாங்கிவிட்டு இப்பொழுதுதான் வந்தேன். இப்பொழுதே மிதக்க ஆரம்பித்துவிட்டேன்.
இராமன், இராவணனை வதை செய்து சீதையை மீட்டு, ரிட்டர்ன் வருவதற்காக புஷ்பக விமானத்தில் ஏறி நின்றபோது, அவர் பொலிவு எப்படி இருந்ததாம் ? இப்படி..
அண்டமே போன்றது ஐயன் புட்பகம்; அண்டத்து உம்பர்,
எண் தரும் குணங்கள் இன்றி, முதல் இடை ஈறு இன்று ஆகி,
பண்டை நான்மறைக்கும் எட்டாப் பரஞ்சுடர் பொலிவதேபோல்,
புண்டரீகக் கண் வென்றிப் புரவலன் பொலிந்தான் மன்னோ.
அப்படிப்பட்ட பொலிவு.. நிச்சயம்.

Saturday, July 10, 2010
Despicable Me

Despicable Me - வெகு நாள் கழித்து மகிழ்ந்து மனதாற ரசித்து சிரித்து இன்புற்றிருந்த ஒன்றரை மணி நேரம் - இந்தப்படம்.
பாக்கியம் இருந்தால் பாருங்கள்.
Subscribe to:
Posts (Atom)