Saturday, August 14, 2010
Friday, August 06, 2010
ரோபோ - சூப்பர்

முதலில் சகிக்கவொண்ணாமல் தோன்றி, மனது ஆறாமல் ஓயாமல், தேயாமல் கேட்டு - பின் பச்சக்கென்று பதிந்து போகும் வழக்கமான ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் ரோபோவில் இரண்டு நாட்களுக்குப் பிறகு காதுக்கும் கழுத்துக்கும் வேலை கொடுக்க ஆரம்பித்துள்ளன.
கிளிமஞ்சாரோ பாடல் அட்டகாசம்.. இரும்பிலே பாடலில் வரும் "எந்திரன்" என்ற ஹம்மிங் வரும்போது மெய் சிலிர்க்கிறது.. பூம் பூம் ரோபோடா பாடலின் ரீமிக்ஸ் ஸ்லம்டாக் படத்தில் வரும் பாடலை ஒத்து இருந்தாலும் அதிர்கிறது.
வைரமுத்து சில இடங்களில் ஆஹா போட வைக்கிறார். பாக்கி இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறார் (சில வரிகள் ரொம்ப குழந்தைத்தனமாக இருக்கிறது)..
புதிய மனிதா பாடலில் வைரமுத்து ஜொலிக்கிறார்.
"ஈரல் கனையம் துன்பமில்லை
இதயக்கோளாரேதுமில்லை
...
நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி.. "
அதே வைரமுத்து
"செந்தேனில் ஒஸ்ஸாபி
மேகத்தில் பூத்த குலாபி" என்னும்போது நெளிய வைக்கிறார்..
"கூகிள்கள் காணாத
தேடல்கள் என்னோடு.. " - எனும்போது கார்க்கி (புதுசோ?) புன்னகைக்க வைக்கிறார்..
ஆல் இன் ஆல், ரோபோ ம்யூசிக் சூப்பர் !!!
-------------------
பிகு - நண்பன் ஸ்ரீகாந்த் சொல்லி "கிளிமஞ்சாரோ" பாடலில் சின்மயியின் குரல் நுணுக்கத்தை வியந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன்..
Subscribe to:
Posts (Atom)